Wednesday 18 January 2017

0 சல்லிக்கட்டில் சாதி உள்ளது என்று வாதிடுவோர்களுக்கு..

1) அலங்காநல்லூரில் நாயுடுக்கள், மூப்பனார்,வளையர், ரெட்டியார்,பள்ளர்,பறையர் சாதியினர் மட்டுமே உள்ளனர். ஊர் நாட்டாமைகள் நாயுடுகளே.
2) வாடிவாசல் முதல் மரியாதை முனியாண்டி கோவில் காளைக்கே. முனியாண்டி கோவில் பூசாரிகள் பள்ளர்களும், பறையர்களுமே
3) காளை அணைவதற்கு எந்த நாளிலும் பள்ளர், பறையருக்கு தடையில்லை. ஆனால் உள்ளூர் மாடுகளை உள்ளூர் ஆட்கள் எந்த சாதியினரும் பிடிக்கக்கூடாது.
4) பக்கத்து ஊர் புதுப்பட்டியில் அகமுடையார் உள்ளனர். அவர்கள் மாடு பிடிக்க வரலாம். மற்றபடி விழாக்கமிட்டி போன்ற எதிலும் அவர்களுக்கு பங்கு இல்லை.
5) இதுவரையான காலத்தில் சல்லிக்கட்டு தொடர்பாக எந்தக் கலவரமும் நடந்ததில்லை.
6) பாலமேட்டைப் பொருத்தவரை அங்கு பெரும்பான்மையாக இருப்பவர்கள் நாடார்கள், அதற்கடுத்து பள்ளர், குறவர், கோனார், பறையர், ரெட்டி ஆகியோர். விழா நிர்வாகக்குழு நாடார்கள் தலைமையில் தான்.
😎 பாலமேட்டிலும் பள்ளர் காளைகளுக்குத் தான் மாலை மரியாதை & அனைத்து சாதியினரும் மாடுபிடிப்பதில் பங்கேற்கலாம். யாருக்கும் தடை இல்லை.
10) அலங்காநல்லூர் யூனியன் பகுதியில் கள்ளர்,மறவர் மைனாரிட்டி சாதியினரே.
11) அவனியாபுரம் விழாக் கமிட்டியின் பொறுப்பாளர்களில் ஒருவரான இன்குலாப் என்ற இஸ்லாமியர் அவர்கள் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டத் தலைவர்.

கள நிலவரம் இதுதான். தமிழ்நாடு முழுக்க நம்பப்படும்படிக்கு அந்தக் குறிப்பிட்ட “ஆணவ ஆதிக்க சாதிக்கு” இந்த நிகழ்வுகளில் பிரதான பங்களிப்பு இல்லை. மறவர், கள்ளர்,அகமுடையார் பெரும்பான்மையாக வாழும் இராமநாதபுரம், உசிலம்பட்டி, மேலூர் பகுதிகளில் பிரசித்தியான ஜல்லிக்கட்டு நிகழ்வு இல்லை. ஜல்லிக்கட்டு அடிப்படையில் நிலவுடமை சாதிகளின் நடவடிக்கை. கள்ளர், மறவர் போன்ற காவல் சாதியினர் நிலவுடமை பெற்றது நூறு, நூற்றைம்பது ஆண்டுகளுக்குள்ளாகவே. அலங்காநல்லூரிலும், பாலமேட்டிலும் வாழும் சாதியினரும் ஆணவ ஆதிக்க சாதியினர்தானே என்பீர்களானால் ஆட்சேபமில்லை. ஆனால் இது வரையான குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்ட போது யாரை எண்ணிச் சொல்லப்பட்டதோ அவர்கள் இந்தக் களத்தில் இல்லை என்பது மட்டுமே உண்மை.

0 comments:

Post a Comment

 

Jallikattu Junction Copyright © 2017 O CEECOMS Powered by Jallikattu